கென் ஜெனிங்ஸ்..சாதனையாளர்

அமேரிக்க தொலைக்காட்சி புதிர் போட்டி நிகழ்ச்சிகளில் தலைசிறந்ததாய் இருந்துவருவது Jeopardy.ஏனெனில்,தலைக்குள் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் பங்குபெறுவோரின் வெற்றியும்,தோல்வியும்.இருகட்டங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்டவொரு தலைப்பின் கீழ் கொடுக்கப்படும் விடைகளுக்கு,பொருத்தமான வினாக்களை விடைகளாக பதிலளிக்க வேண்டும்.பங்கு பெறுவோர்கள் நன்கு படித்தவராய் (well read) மட்டும் இருந்தால் போதாது,ஆழமான நினைவுத்திறன் கொண்டவர்களாக இருக்கவேண்டும் அல்லது வாசன் பிள்ளை போன்று நிறைய வல்லாரை கீரை சாப்பிட வேண்டியவர்களாக இருக்ககூடாது.

இப்போட்டி ஆரம்பித்த காலத்திலிருந்து என்றும் இல்லாத வகையில் 75 தடவைகள் தொடர்ந்து வெற்றியைப் பெற்று வந்தார் யூட்டா மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளர் கென் ஜெனிங்ஸ்.நேற்றுவரை 2.5 மில்லியன் வெள்ளிகளை பெற்றிருந்த கென், இன்று தோல்வியைத் தழுவினார்.ஜெனிங்ஸ் பங்குபெற ஆரம்பித்ததிலிருந்து நேரக்குறைவான என் போன்ற பலர் கூட jeopardy நிகழ்ச்சியைத் தவறவிட்டதில்லை.மனிதனின் ‘மூளைத்திறன் வலிவை’ புதியதொரு நிலைக்கு மேலெடுத்துச் சென்ற கென் ஜெனிங்ஸ் போன்றோர் மென்மேலும் உருவாக வேண்டும்.