மதுரைத்திட்டம்

இணையத் தமிழர்களில் மதுரைத் திட்டம் என்னவென்று தெரியாதோர் சொற்பம்.ஆயினும் திட்ட உறுப்பினர்களாய் இருப்பவர்களுக்கு கூட,“இணையத்திலேயே குறிப்பிட்ட சில நூல்களின் வருடிய படிகளைப் பார்த்து தட்டச்சு செய்யலாம் மற்றும் பிழை பார்க்கலாம்” என தெரிந்திருக்குமா என்பது ஐயமே.மதுரைத்திட்ட துணை இயக்குநர் முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் இதற்காக ஏற்படுத்தியுள்ள பிழை திருத்தம் & தட்டச்சு தளத்தில் ஆர்வமுள்ளவர்கள் கண்டு பங்கு பெறலாம்.திட்ட உறுப்பினர்களாய் இல்லாதோர் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் சென்று மேலதிக தகவல்களை கண்ணுறலாம். அண்மையில் நடைபெற்ற அமேரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைகளின் விழாவில் மதுரைத்திட்டங்கள் 1-200 வரை அடங்கிய மின் குறுந்தட்டுகள்

<img src=http://home.comcast.net/~kollidam/cdcov_2-mini.JPG align=right

இலவசமாக பங்கு பெற்றோருக்கு கொடுக்கப்பட்டது.அமேரிக்கா மற்றும் கேனடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் யாருக்கேனும் குறுந்தட்டுகள் தேவைப்பட்டால் நான் அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் உண்டு.பத்தொடு பத்தாக மற்றொரு குறுந்தட்டாக அதனை கடாசி விடாமல்,“என்ன வகையில்” இலக்கியங்கள்,புதினங்கள் பல அடங்கிய இக்குறுந்தட்டு உங்களை கவர்ந்தது என்பதை மதுரைத் திட்ட மடற்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.அவ்வளவே.